யாழில் இரு இளைஞர்களால் பொலிஸாரின் கிடுக்குப்பிடிக்குள் பலர் ; இரகசிய தகவல் அம்பலப்படுத்திய விடயம்

யாழில் இரு இளைஞர்களால் பொலிஸாரின் கிடுக்குப்பிடிக்குள் பலர் ; இரகசிய தகவல் அம்பலப்படுத்திய விடயம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள போதை வியாபரிகளிடமிருந்து போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் இரு இளைஞர்களால் பொலிஸாரின் கிடுக்குப்பிடிக்குள் பலர் ; இரகசிய தகவல் அம்பலப்படுத்திய விடயம் | Several Held In Jaffna Police Crackdownஇருவரது உடைமையில் இருந்தும் 2கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , 12 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த போதை வியாபாரி ஒருவரே போதைப்பொருளை விநியோகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த போதை வியாபாரியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள போதை வியாபரிகளிடமிருந்து போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.