திடீரென சுகயீனம் ஏற்பட்ட இளம் குடும்பஸ்தர் யாழ். போதனாவில் உயிரிழப்பு
திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
பாரதிபுரம், விசுவமடு பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் பிரபு (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், மதுவுக்கு அடிமையான இவருக்கு கடந்த 07ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது.
இந்நிலையில் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அன்றையதினமே கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதன்பின்னர் 09ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.