
கொழும்பு மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் PCR பரிசோதனை!
கொழும்பு மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கொழும்பு மாநகர சபையின் நிதிக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் நிதிக்குழு கூட்டம் நேற்று முன் தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.