உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, 75 ரூபாய் மதிப்பாலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். மேலும், உலக உணவு தினத்தை முன்னிட்டு, அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்வின்போது பேசிய பிரதமர் மோடி, உலக உணவுத் திட்டத்திற்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது ஒரு பெரிய சாதனை என்றும், இதில் நமது பங்களிப்பும் அதனுடன் இணைந்தது வரலாற்று சிறப்புமிக்கது என்பதில் இந்தியா மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.