ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்? இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டில் எந்த பகுதியிலாவது கொரோனா தொற்று ஆபத்து இருந்தால் அந்தப் பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையிலான அரசாங்கம் தவிர்க்க முடியாமல் இதுபோன்ற இந்த சட்டம் அமுல் செய்யப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டுப்பிடிக்கப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படும். ஏற்கவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது.
நேற்று வியாழக்கிழமை 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்தும், 46 பேர் ஆடைத் தொழில்சாலை ஊழியர்களுடன் தொடர்பை பேணியவர்களும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் மினுவங்கொடை, கம்பஹா மற்றும் காட்டுநாயக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் இருவர் மட்டுமே கொழும்பில் வசிப்பவர்கள், வத்தளை மற்றும் கந்தான பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.