தென்னிலங்கையின் அரச ஊடகம் ஒன்றின் பணியாளருக்கு உறுதியானது கொரோனா!

தென்னிலங்கையின் அரச ஊடகம் ஒன்றின் பணியாளருக்கு உறுதியானது கொரோனா!

தென்னிலங்கையில் இயங்கும் அரச தொலைக்காட்சி சேவையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பலாங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனுவும் தற்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் அந்த தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவருடன் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.