
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி..!
நாட்டில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இன்று காலை முதல் 8 மணிமுதல் இரவு 10 மணிவரையில் குறித்த வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் 19 காவல்துறை அதிகார பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கின்றது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் கடந்த வாரத்தில் 3 நாட்கள் அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் நாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாக அந்த செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்றைய தினம் அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை மீள திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.