இன்றைய ராசி பலன்கள் 14/10/2020

இன்றைய ராசி பலன்கள் 14/10/2020

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டுகள் கிடைக்கும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள்.  உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.நன்மை கிட்டும் நாள். 


மிதுனம்

மிதுனம்:  பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீட்டை அழகு படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.


கடகம்

கடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகும் இளமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். உற்சாகமான நாள்.


சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களுடன் மற்றவர்களை  ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.


கன்னி

கன்னி: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.  கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


துலாம்

துலாம்:  எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள்கை ஓங்கும். பொருந்தன்மையுடன்  நடந்து கொள்ள வேண்டிய நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும் உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.


தனுசு

தனுசு: திட்டமிட்ட காரியங்கள் எளிதாக முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.


மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை  பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


கும்பம்

கும்பம்: கணவன் - மனைவிக்கு ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள்.மகிழ்ச்சியான நாள்.


மீனம்

மீனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய யுக்திகளை கையாளுவீர்கள்.  தொட்டது துலங்கும் நாள்.