1 கோடி பெறுதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

1 கோடி பெறுதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பு-புறக்கோட்டை பகுதியில் 1 கிலோகிராமுக்கு அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 26 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 1 கோடி பெறுமதியுடையவை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.