யாழில் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!

யாழில் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!

தவறான முடிவெடுத்து ஒரு வகை திரவத்தினை உட்கொண்ட குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் பகீரதன் (46வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மேற்படி குடும்பஸ்தர் கடந்த 4ஆம் திகதி ஒரு வகை நச்சு திரவத்தினை உட்கொண்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.