கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சந்தேகம் இருந்தால் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சந்தேகம் இருந்தால் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை

கொரோனா தொற்று தனக்கு ஏற்பட்டுள்ளது என சந்தேகம் இருந்தால் அது தொடர்பில் அச்சம் கொள்ளாமல் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, சுகாதாரப் பிரிவினரால் பெற்று கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் உரிய முறையில் பின்பற்றப்படாமை காரணமாக நாட்டினுள் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.