மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் குறித்து பிரதிப் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட தகவல்!
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பில் இதுவரை எதுவித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் இன்று முதல் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடைபொலிஸ் நிலைய அதிகாரிகள் 85 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றூண்டிச்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏனைய பொலிஸ் நிலைய அதிகாரிகளை உள்வாங்கி மினுவாங்கொட பொலிஸ் நிலையம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தினை தொற்று நீக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார தரப்பினரால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்திலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.