முறைப்பாட்டுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்-நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

முறைப்பாட்டுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்-நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

போலி உறுதிப்பத்திரத்தை தயாரித்து தலைமன்னார் பகுதியில் 80 ஏக்கர் காணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரரான ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட இரண்டு பேருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுவொன்றின் ஊடாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மீஹார் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதன்போதே இது தொடர்பான உத்தரவு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாதிக்கப்பட்டவர் தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்ரசேன, கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஏனைய சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணை மீண்டும் எதிர்வரும் 22ஆம் எடுத்து கொள்ளப்படவுள்ளது.