அடுத்த படத்திற்கு தயாரான ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவரது இசையில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐங்கரன், ஜெயில் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. 

 

இந்நிலையில் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அறிமுக இயக்குனர் அகிலன் இயக்கும் இந்த புதிய படத்தை நவீரா சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் இதர நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட இருக்கிறார்கள்.