2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற லூயி க்ளூக்

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் போட்டி பட்டியலில் உள்ளனர்.

 

இந்நிலையில், 2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு பெறுபவர் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதன்படி, அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து நாளை அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்