
தம்புள்ளையிலும் ஒரு கொரோனா நோயாளி
மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தம்புள்ளைசை் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்த நிலையில் விடுமுறைக்காக கடந்த 03ஆம் திகதி தம்புள்ளை வில்கமுவவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் வைத்து அவருக்கு சுகயீனம் ஏற்பட்டபோது அம்பியூலன்ஸ் அழைக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றது.