
ஆந்திர மாநிலத்தில் பாடசாலை மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று!
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து மாநில அரசு பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதன்போது மாநிலத்தில் விஜயநகரத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,“ மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை பாடசாலைக்கு வந்த முதல் நாள் ஒக்டோபர் 5 இல் நடத்தப்பட்டது. எனவே இவர்களுக்கு பாடசாலையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இவர்கள் பாடசாலைக்கு வரும் முன்னரே வெளியிடங்களில் கொரோனா கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.