சூரியனை போன்ற ஒரு விண்மீன் கண்டுபிடிப்பு (அக். 6 1995)

சூரியனை போன்ற ஒரு விண்மீன் கண்டுபிடிப்பு (அக். 6 1995)

51 பெகாசி என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன் ஆகும். இது பூமியில் இருந்து 15.4 பார்செக் (50.1 ஒளியாண்டுகள்) தூரத்தில் பெகாசஸ் என்ற விண்மீன் தொகுதியில் அமைந்துள்ளது. இதுவே சூரியனுக்கு அடுத்ததாக கோள்களைக் கொண்டிருக்கக்கூடிய விண்மீன் என 1995 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பற்றிய தகவலை 1995, அக்டோபர் 6 ஆம் நாள் மைக்கல் மேயர் மற்றும் டிடியர் குவெலொஸ் ஆகியோர் அறிவித்தனர். இதனை பூமியில் இருந்து தொலைக்காட்டி மூலமாகவோ, அல்லது இரவு நெரங்களில் வெறும் கண்ணினாலோ பார்க்கக் கூடியதாக உள்ளது.

 

51 பெகாசி என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன் ஆகும். இது பூமியில் இருந்து 15.4 பார்செக் (50.1 ஒளியாண்டுகள்) தூரத்தில் பெகாசஸ் என்ற விண்மீன் தொகுதியில் அமைந்துள்ளது. இதுவே சூரியனுக்கு அடுத்ததாக கோள்களைக் கொண்டிருக்கக்கூடிய விண்மீன் என 1995 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

இக்கண்டுபிடிப்பு பற்றிய தகவலை 1995, அக்டோபர் 6 ஆம் நாள் மைக்கல் மேயர் மற்றும் டிடியர் குவெலொஸ் ஆகியோர் அறிவித்தனர். இதனை பூமியில் இருந்து தொலைக்காட்டி மூலமாகவோ, அல்லது இரவு நெரங்களில் வெறும் கண்ணினாலோ பார்க்கக் கூடியதாக உள்ளது.

 


51 பெகாசி ஒரு குறு விண்மீன் எனவும் இது 7.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானதென்றும் (சூரியனை விடப் பழமையானது), 4-6 விழுக்காடு அதிக பருமனுடையதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவு உலோகங்களையும், குறைந்தளவு ஐதரசனையும் கொண்டுள்ளது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1955 - வயோமிங்கில் டிசி-4 விமானம் ஒன்று வீழ்ந்ததில் 66 பேர் கொல்லப்பட்டனர். * 1966 - எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. * 1973 - 80,000 எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்து இஸ்ரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யொம் கிப்புர் போரை ஆரம்பித்தனர். * 1976 - பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர். * 1976 - தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் ராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். * 1981 - எகிப்திய அதிபர் அன்வர் சதாத் கொலை செய்யப்பட்டார். * 1987 - பிஜி குடியரசாகியது. * 2000 - யுகோஸ்லாவியா அதிபர் ஸ்லோபோடன் மிலோசெவிக் ராஜினாமா செய்தார். * 2002 - பிரெஞ்சு எண்ணெய்த் தாங்கி ஏமனில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. * 2010 - தமிழ் விக்கிப்பீடியாவில் 25,000 கட்டுரை இலக்கு எட்டப்பட்டது.