ஶ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிவிப்பு

ஶ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிவிப்பு

கொவிட் தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் இருந்ததைப் போலவே ஸ்ரீலங்கன் விமான சேவையை மீண்டும் நிறுவ உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்த இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவுக்கான முழுமையான செயற்பாடுகளை மீள ஸ்தாபிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.