தேவைக்கேற்ப நிலக்கரி விநியோகம் இருக்கும்: மத்திய அரசு உறுதி

தேவைக்கேற்ப நிலக்கரி விநியோகம் இருக்கும்: மத்திய அரசு உறுதி

பருவமழை முடிந்த பிறகு நிலக்கரி விநியோகம் வேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதில் சர்வதேச சந்தையில் நிலக்கரி உயர்ந்துள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் இதனால், மின் தட்டுப்பாடு ஏற்படலாம் என டெல்லி உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகள்  கவலை தெரிவித்தனர். நிலக்கரி தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத்  ஜோஷி, மின் துறை அமைச்சர் ஆர்.கே சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

 

 

இந்த நிலையில், நிலக்கரி விநியோகம் போதுமான அளவு இருக்கும் என்று நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- நேற்று 1.95 மில்லியன் டன்கள் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது. இது சாதனை அளவாகும். இந்த விநியோக வேகத்தை தொடர்ந்து அதிகப்படுத்த உள்ளோம்.

 

பருவமழை முடிந்த பிறகு நிலக்கரி விநியோகம் வேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதில் சர்வதேச சந்தையில் நிலக்கரி உயர்ந்துள்ளது. சர்வதேச விலை உயர்வு உள்நாட்டு நிலக்கரி உற்பத்திக்கும் அழுத்தம் தந்துள்ளது.

 

அக்டோபர் 21 ஆம் தேதிக்குப் பிறகு 2 மில்லியன் டன்கள் அளவுக்கு நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க உள்ளோம். தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என்று நாங்கள் நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறோம்” என்றார்.