ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சூறாவளி.. பிலிப்பைன்ஸில் 58 பேர் பலி
கடந்த சில நாட்களாக உலகின் பல பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் எழுந்து வரும் நிலையில், மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய 'கல்மேகி' சூறாவளி காரணமாக குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தப் புயல் தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

திங்கட்கிழமை (03) மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையை எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.