வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கொலை

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கொலை

சூரியவெவ - மஹாபெலஸ்ஸ பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்ருந்த பெண்ணொருவர் இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயதத்தால் தாக்கி குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

34 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குறித்த பெண் தன் 17 வயதான மகனுடன் வீட்டில் இருந்துள்ளதுடன், பல வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவர் அவரை விட்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.