புற்றுநோய் கண்டறிதல்- சிகிச்சையின் தாமதங்கள் காரணமாக 35,000 இறப்புகள் ஏற்படலாம்!

புற்றுநோய் கண்டறிதல்- சிகிச்சையின் தாமதங்கள் காரணமாக 35,000 இறப்புகள் ஏற்படலாம்!

கொரோனா வைரஸ் காரணமாக, புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் தாமதங்கள் ஒரு வருடத்திற்குள் பிரித்தானியாவில் 35,000இற்கும் அதிகப்படியான இறப்புகளை உருவாக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இரண்டு மில்லியன் வரை வழக்கமான மார்பக, குடல் மற்றும் கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் சோதனைகள், தவறவிடப் பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர உதவிகள் மற்றும் சிகிச்சைகள் தாமதம் அல்லது இரத்து செய்யப்பட்டுள்ளன.

விஞ்ஞானிகள் எட்டு மருத்துவமனை அறக்கட்டளைகளின் தரவை ஆராய்ந்து, தங்கள் கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

புற்றுநோய்க்கான ஹெல்த் கேர் ரிசர்ச் ஹப் (Health Care Research Hub), டேட்டா-கேன் (DATA-CAN) நடத்திய இந்த ஆய்வு, சாதாரண நிலைகளுக்குத் திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்பதைப் பொறுத்து வெவ்வேறு விளைவுகளை மாதிரியாகக் கொண்டுள்ளது.

ஒரு மோசமான சூழ்நிலையில், தாமதங்கள் தொடர்ந்தால், ஒரு வருடத்திற்குள் 35,000 கூடுதல் புற்றுநோய் மரணங்கள் ஏற்படக்கூடும் என இந்த ஆய்வு எச்சரிக்கின்றது.

டேட்டா கேனின் முன்னணி பேராசிரியர் மார்க் லாலர், ‘எங்களுக்கு கிடைத்த ஆரம்ப தரவு மிகவும் கவலை அளிக்கின்றது’ என கூறினார்.