ரயிலுடன் மோதிய கார் ; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த கதி
கொஸ்கம - பியகம பகுதியில் நேற்று (27) பெலியத்தயிலிருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக ரயில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து பலப்பிட்டிய மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
சமிக்ஞை விளக்கு ஒளிர்ந்து, பாதுகாப்பு மணி ஒலித்துக் கொண்டிருந்தபோது கார் ரயில் மார்க்கத்தில் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.
ரயில் மோதி கார் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு, மேலும் காரில் இருந்த தந்தை, மகன் மற்றும் உறவினர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.