உயர்தர பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 6மு்ம் திகதி வரை நடைபெறவுள்ளது, குறித்த பரீட்சைகள் 2,648 நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது.
இதன் இம்முறை 2,77,580 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 85,244 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. 2,936 நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 3,31,694 பேர் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.