கொரோனாவில் இருந்து மேலும் 4 பேர் பூரண குணம்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.
அதன்படி, இதுவரை 3,258 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,396 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் 125 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.