இந்திய கடல் பாதுகாப்பு வீரர்களுக்கு இலங்கையில் கொரோனா தொற்று உறுதி

இந்திய கடல் பாதுகாப்பு வீரர்களுக்கு இலங்கையில் கொரோனா தொற்று உறுதி

காலி – தெவட்ட பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவை சேர்ந்த கடல் பாதுகாப்பு வீரர்கள் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவ அதிகாரி தெனுர கே. சிங்காராச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த 14 கடல் பாதுகாப்பு வீரர்கள் கடந்த 29 ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர். இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதுடன் ,அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து ஏனைய 13 பேர் தெவட்ட பிரதேசத்தில் உள்ள ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்காராச்சி குறிப்பிட்டுள்ளார்.