செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளை வளப்பவர்களுக்கு விடுக்கப்ட்டுள்ள எச்சரிக்கை!
விலங்களுக்கு ஏற்படும் Rabies நோய்க்கெதிராக செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்குமாறு அரசாங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், Rabies நோயினால் கடந்த இரண்டு வாரங்களில் நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் தங்களது செல்லப்பிராணிகளுக்கு இந்த தடுப்பூசியை வழங்குவதன் மூலம் நாட்டில் இருந்து Rabies நோயை இல்லாதொழிக்க முடியுமென தேசிய வைத்தியசாலையின், Rabies நோய் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய அமில குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் செல்லப்பிராணிகளின் அநாவசியமான இனப்பெருக்கத்தை நிறுத்த வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தடுப்பூசி வழங்காமல் செல்லப்பிராணிகளுக்கு உணவளிப்பது வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்குமென வைத்திய அமில குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இதுவரை Rabies நோயினால் 18 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்து 700 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்திய அமில குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, Rabies நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்து நரிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மில்லனிய, ஹொரன, இங்கிரிய மற்றும் மதுராவல் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.