திவுலபிட்டியில் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு

திவுலபிட்டியில் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு

திவுலபிட்டியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் குறித்த பெண்ணுக்கு கோவிட் 19 இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்படி, கம்பஹா மருத்துவமனையின் சுமார் 15 ஊழியர்களும், அந்தப் பெண் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்களில் சுமார் 40 பேரும் உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.