வீதி ஒழுங்கைச் சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படுமா..? காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி
வீதி ஒழுங்கைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் வாகனங்களின் சராசரி வேகம் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதான வீதிகளிலும் வீதி ஒழுங்கைச் சட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி முதல் காலை 6 மணியிலிருந்து 9 மணி வரையும் மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணிவரையிலும் தற்போது மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் இந்த வீதி ஒழுங்கு சட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியின், பொல்துவ சுற்றுவட்ட வீதி தொடக்கம் ஹோர்ட்டன் பிளேஸ் வரை,
பேஸ்லைன் வீதியில், களணி பாலத்திலிருந்து ஹைலெவல் வீதி சுற்றுவட்டம் வரை,
ஹைலெவல் வீதியின் அனுலா வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, பித்தளை சந்தி, ஸ்ரீ சம்புத ஜயந்தி மாவத்த, தும்புளை சந்தி, தேர்தஸ்டன் கல்லூரி, மார்கஸ் பெர்ணான்டோ வீதி, பொது நூலகம், ஆனந்தகுமாரசுவாமி மாவத்த வரை,
காலி வீதியில் வில்லியம் சந்தியில் ஆரம்பித்து, தெஹிவளை, காலி வீதி சுற்றுவட்டம் வரையான வீதிகளில் வீதி ஒழுங்கைச் சட்டம் செய்றபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.