சட்டமா அதிபரின் அறிவித்தலை மீறி மத்திய கிழக்கு கடலுக்கு கொண்டுச் செல்லப்பட்ட நியூ டயமன்ட் கப்பல்

சட்டமா அதிபரின் அறிவித்தலை மீறி மத்திய கிழக்கு கடலுக்கு கொண்டுச் செல்லப்பட்ட நியூ டயமன்ட் கப்பல்

தீப்பற்றலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவித்தலையும் மீறி மத்திய கிழக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதனைக் குறிப்பிட ;டுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளுக்காக செலான பணம் மற்றும் இழப்பீட்டின் அடிப்படையில் குறித்த கப்பல் இந்திய திசைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் அனுமதியுடன் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த கப்பலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுகப்பட்டுள்ளது.

தற்போது குறித்த கப்பல் திருகோணமலை - இராவணன் கோட்டையில் இருந்து 90 கடல் மைல் தொலைவில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.