மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டது என்ன?

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டது என்ன?

மாகாண தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கத்தை ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் தீர்மானித்ததாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது அலுவலகத்தில் இது தொடர்பில் சந்திப்புக்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலப்பு முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கு வழங்கும் புதிய சட்டத்தின் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மாகாண சபைகள் 2017 முதல் செயலிழந்துள்ளன.

இந்தநிலையில் புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் வாக்கெடுப்புகளைக் கொண்டுவருவதற்கான முறையை அரசாங்கம் நிறைவுசெய்யவேண்டும். அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதன் மூலம் பழைய முறைக்கு திரும்ப வேண்டும்.

இது தொடர்பாக தமது அலுவலகம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் இல்லாமல் கட்சிகளுடன் தனித்தனியாக சந்திப்பை நடத்தியது. இதன்போது தேர்தல்களை நடத்துவதற்கான செயற்பாடுகளில் அரசாங்கத்தை ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் இணங்கியதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்