ஜனாதிபதியிடம் இருந்து மற்றுமொரு நற்செய்தி

ஜனாதிபதியிடம் இருந்து மற்றுமொரு நற்செய்தி

சுயதொழிலாக பால் பண்ணைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதற்கு உதவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கிராமத்துடன் உறவாடல் நிகழ்ச்சித்திட்டம், நேற்றைய தினம் மாத்தளை மாவட்டத்தில், வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஹிம்பிலியாகட கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

தேசிய பண்ணை வள அபிவிருத்தி சபையுடன் கலந்துரையாடி அவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வசதிகளை செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கமைய, குறைந்த தொகைக்கு பசுக்களை வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கும் குறித்த கல்ந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

பண்ணை விவசாயிகள் கடன் கோரிக்கைகளை முன் வைக்கும்போது அதற்கான பிணை நிபந்தனைகளை இலகுபடுத்துவதற்கு வங்கிகளுடன் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.