மருத்துவமனையில் அமெரிக்க அதிபர்! ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்

மருத்துவமனையில் அமெரிக்க அதிபர்! ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா மக்களின் பிரார்த்தனைகள் என்றும் உங்களுடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய உதவியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.