வேலையே செய்யாமல் 6 வருடங்களாக சம்பளம் பெறும் 21 பட்டதாரிகள் - வெளிவந்த தகவல்

வேலையே செய்யாமல் 6 வருடங்களாக சம்பளம் பெறும் 21 பட்டதாரிகள் - வெளிவந்த தகவல்

இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) 21 பட்டதாரிகளுக்கு எந்தவொரு கடமையும் வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

இந்த 21 பட்டதாரிகளில் சுமார் பத்து பேர் நாரஹென்பிடி தலைமை அலுவலகத்திலும், மீதமுள்ளவர்கள் மற்ற டிப்போக்களிலும் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த ஊழியர்களில் சிலருக்கு தங்கள் கடமைகளைச் செய்ய கதிரை மேசை கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.

30,000 ஊழியர்களைக் கொண்ட இலங்கை போக்குவரத்து சபையில் சுமார் 49 பட்டதாரிகள் பணிபுரிகின்றனர்.

எனினும் தொடர்புடைய பட்டதாரிகள் எதிர்காலத்தில் மற்ற பகுதிகளுக்கு இணைக்கப்படுவார்கள் என இ.போ.ச தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்