கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்திற்கு தற்காலிக தடை!

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்திற்கு தற்காலிக தடை!

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் தற்காலிகமாக தடை செய்யப்படவுள்ளது.

கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பரந்தன் பூநகரி வீதியூடாக இன்று(சனிக்கிழமை) முதல் தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்துக்களுக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரந்தன் பூநகரி வீதியில், பரந்தனிலிருந்து 12 ஆவது கிலோ மீற்றருக்கு அண்மையாக உள்ள 1/5 இலக்க இரும்பு பாலம் ஒன்றில் ஏற்பட்ட திருத்த வேலைகள் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கிளிநொச்சி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் திருத்தப்பணிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.