புதிய நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட உறுப்பினர்களின் விபரம் வெளியானது!

புதிய நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட உறுப்பினர்களின் விபரம் வெளியானது!

புதிய நாடாளுமன்றச் செயல்பாடுகளின் அடிப்படையிலான தரப்படுத்தல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் உரைகள் தொடர்பில் இந்த தரப்படுத்தலில் அதிகம் அவதானிக்கப்படும்.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்கள், வரவு, உரையாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் திறனை Manthri.lk இணையம் தரப்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில், புதிதாக தெரிவான நாடாளுமன்றத்தின் முதல் மாத செயற்பாட்டின் அடிப்படையில் உறுப்பினர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தரப்படுத்தலின்படி, முதல் 5 இடங்களில், அநுர குமார திஸநாயக்க, சஜித் பிரேமதாஸ, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.