நீர்கொழும்பு கொள்ளைச் சம்பவம் : சந்தேக நபர்கள் நால்வர் கைது

நீர்கொழும்பு கொள்ளைச் சம்பவம் : சந்தேக நபர்கள் நால்வர் கைது

நீர்கொழும்பு கட்டான பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு கட்டான பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடந்த 30 ஆம் திகதி 2 கோடி ரூபா பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் ஆகியன கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் பிரதான சந்தேக நபர்கள் மூவர் உளளிட்ட மொத்தமாக நான்கு பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் கம்பஹா, எப்பாவல, நிகவெரடிய மற்றும் மாவதகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்கேத நபர்கள் 27 தொடக்கம் 43 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் இருந்து மகிழூர்தி மற்றும் உந்துருளி ஆகிய கைற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்தவிடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 6 காவல்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.