தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கத்திற்குள் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கு இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகவியலாளர் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி அஞ்சல் மா அதிபர்களை நேற்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் அஞ்சல் சேவைகளில் ஏதேனும் குறைப்பாடுகள் இருப்பின், அது தொடர்பில் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அதற்கான உடனடி தீர்வினை பெற்றுத் தருவதாகவும் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.