கேரளாவில் டிசம்பர் மாதம் வரை திரையரங்குள் திறக்கப்படாது – திரையரங்குகள் சங்கம்

கேரளாவில் டிசம்பர் மாதம் வரை திரையரங்குள் திறக்கப்படாது – திரையரங்குகள் சங்கம்

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் டிசம்பர் மாதம் வரை திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் வரை திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை.

ஜி.எஸ்.டி., முனிசிபல் வரி  போன்ற வரி விதிப்புகளுடன் 50 சதவீத பார்வையாளர்களை கொண்டு திரையரங்குகளை இலாபகரமாக இயக்க முடியாது.

மேலும் தற்போதைய சூழலில் பார்வையாளர் யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் தியேட்டரை மூட வேண்டிய நிலை ஏற்படும். வரி விதிப்புகளை அரசு நீக்கினால் மட்டுமே சினிமா திரையரங்குகளை  திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.