யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சோற்றுப் பார்சலில் அட்டை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சோற்றுப் பார்சலில் அட்டை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சோற்றுப் பார்சலில் அட்டை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணவு தயாரித்த இல்லத்தை சீல் வைத்து மூடுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் சோற்றுப் பார்சல் வழங்கியவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு நபர் ஒருவர் உணவு வழங்கி வருவது வழக்கம். சம்பவ தினம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சோற்றுப் பார்சல் ஒன்றில் அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இச் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களால் திருநெல்வேலி பொதுச் சுகாதார பரிசோதகர் கிருபனின் கவனத்துக்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்,

உணவு தயாரிக்கப்பட்ட இல்லத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தியபோது அங்கு பத்துக்கும் மேற்பட்ட சுகாதாரக் குறைபாடுகள் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதையடுத்து உணவு வழங்கிய நபருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.