ஹாத்ராஸ் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் உறுதியாகவில்லை என தெரிவிப்பு!

ஹாத்ராஸ் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் உறுதியாகவில்லை என தெரிவிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு  உயிரிழந்துள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் அந்த பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது இன்னும்  உறுதியாகவில்லை என அம்மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் கண்காணிப்பாளர் விக்ராந்த், “அலிகார் மருத்துவமனை அளித்துள்ள மருத்துவ அறிக்கையில் இளம் பெண் உடலில் காயங்கள் இருந்ததாகவும்  அது பாலியல் வன்கொடுமையால் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தடயவியல் நிபுணர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. முதற்கட்ட மருத்துவ பரிசோதனை அடிப்படையிலேயே பாலியல் வன்கொடுமை என்று கூறியுள்ளனர்.

சிறப்பு விசாரணைக் குழுவினர்  குற்றம் நடைபெற்ற பகுதியை பரிசோதனை செய்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்களை சிறப்பு விசாரணைக்குழு வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.