சர்வதேச விமான நிலையம் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்!

சர்வதேச விமான நிலையம் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணி 2017 ஆம் ஆண்டு நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர்  இதன் மூலம்  ஆண்டுக்கு 15 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவையை வழங்க முடியுமெனவும்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தை அண்மித்துள்ள பகுதியில் வாகன தரிப்பிடமொன்று  அமைக்கப்படுமெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.