நீர்வேலியில் இன்றிரவு பயங்கரம் - தாய் மற்றும் மகன் மீது வாள்வெட்டு

நீர்வேலியில் இன்றிரவு பயங்கரம் - தாய் மற்றும் மகன் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டுக்குள் இன்றிரவு புகுந்த இனம்தெரியாத குழுவினர் தனுரொக் என்பவரின் நண்பர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதன்போது மகனை காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பு.சிவா( வயது 30) அவரது தாயார் ரேணுகா(வயது 50 ) இருவருமே படுகாயமடைந்தவர்களாவர்.

தாக்குதலை நடத்திய கும்பல் வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தியும் தீயில் எரித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தனுரொக் மீது கடந்தவாரம் யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடி பகுதியில் காரில் வந்தவர்களால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.