இன்றைய ராசி பலன்கள் 01/10/2020

இன்றைய ராசி பலன்கள் 01/10/2020

மேஷம்

இடமாற்றத்திற்கான அறிகுறி தென்படும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணத்தால் நல்லவர்களின் சந்திப்பு கிட்டும்.

ரிஷபம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

மிதுனம்

ஆனந்த வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்

கடகம்

பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப் பெறும் நாள். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி ஏற்படும். பொது வாழ்வில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும். எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்க நேரிடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

கன்னி

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத்துணையின் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.

துலாம்

எதிரிகள் உதிரியாகும் நாள். எதை எந்த நேரத்தில் செய்ய
நினைத்தீர்களோ அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாங்கல்-கொடுக்கல்களில் ஆதாயம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.

விருச்சகம்

நன்மைகள் நடைபெறும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்.

தனுசு

இனிய செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். பழைய வாகனத்தை மாற்றம் செய்ய முன்வருவீர்கள். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

மகரம்

தடைகள் அகலும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தலைமைப் பொறுப்புகள் தானே தேடி வரலாம். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணம் அதிகரிக்கும்.

கும்பம்

சுபகாரியங்கள் முடிவாகும் நாள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பூமி வாங்கும் யோகம் உண்டு. நீண்ட
நாளையப் பாக்கிகள் வசூலாகும்.

மீனம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும்.