பயிற்சியிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்குள் அடிதடி ; இறுதியில் நடந்த விபரீதம்

பயிற்சியிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்குள் அடிதடி ; இறுதியில் நடந்த விபரீதம்

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் நேற்று (10) பிற்பகல் இரண்டு பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒரு கான்ஸ்டபிள் மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிளை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்கப்பட்ட நபர் பயிற்சியில் இணைந்த புதிய  பொலிஸ் கான்ஸ்டபிள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயிற்சியிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்குள் அடிதடி ; இறுதியில் நடந்த விபரீதம் | Beating For Police Constables During Training

தாக்குதலுக்கு உள்ளான பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் களுத்துறையில் உள்ள நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான கான்ஸ்டபிளிடமிருந்து வாக்குமூலம் பெற்ற பிறகு சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.