காதலனா...நண்பனா... நள்ளிரவில் யுவதியால் அரங்கேறிய கூத்து; அயலவர்களும் நித்திரையில்லை

காதலனா...நண்பனா... நள்ளிரவில் யுவதியால் அரங்கேறிய கூத்து; அயலவர்களும் நித்திரையில்லை

வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வந்து வேலை செய்யும் இளைஞர், யுவதிகளின் ஒரு சிலரின் நடத்தைகள் தொடர்பில் அயலவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதுண்டு.

அந்தவகையில் வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு வந்து பணியாற்றும்   யுவதி ஒருவர், காதலனும் ஆண் நண்பரும் வேண்டுமென  நேற்று (11) நள்ளிரவில் ஒற்றைக்காலில் நின்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காதலனா...நண்பனா... நள்ளிரவில் யுவதியால் அரங்கேறிய கூத்து; அயலவர்களும் நித்திரையில்லை | Lover Friend Stumbled Upon By Hill Girl In Colombo

 மாடி வீடொன்றில் வாடகைக்கு  தங்கியிருந்து குறித்த யுவதி பணிக்குச் சென்று வருவதாக கூறப்படுகின்றது. யுவதி தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

எனினும்,   யுவதியை  இரண்டு இளைஞர்கள், நாளுக்கு நாள் ஆள்மாறி, கூட்டுக் கொண்டுவந்து வீட்டுக்கு வெளியே விட்டு செல்வார்களாம்.

இந்நிலையில் , நேற்று (11) நள்ளிரவில்  சத்தம் கேட்டு கண்விழித்து கொண்ட அந்த அறையில் இருக்கும் மற்றுமொரு யுவதி, மின் விளக்குகளை ஒளிரவிட்டு பார்த்தபோது,   குளிசைகளை விழுங்குவதற்கு யுவதி தயாராகிக் கொண்டு இருந்துள்ளார்.

நிலைமையை சுதாகரித்துக் கொண்ட யுவதி, வீட்டின் உரிமையாளரின் மனைவிக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளார். எனினும் அவர் வருவதற்கு முன்னரே, குளிசைகளை விழுங்க இருந்த யுவதி, தன்னை அழைத்து வரும் அந்த இரண்டு இளைஞர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்ததால் இருவரும் பறந்து வந்து விட்டனர்.

எனினும், வீட்டிற்கு உள்ளே அனுமதிகாமையினால் இளைஞர்கள் வெளியே நின்று, யுவதி  “உனக்கே... எனக்கா” என சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் யுவதியோ, இருவரும்  வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சத்தத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் கண் விழித்துக் கொண்டனர்.

எனினும், இரவு வேலையில் இருந்து இடையில் திரும்பிய வீட்டு உரிமையாளர்,இரு ஆண்களையும் அவ்விடத்திலிருந்து அனுப்பிவிட, புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் அனைவரும் நித்திரைக்குச் சென்றுள்ளனர்.

விசாரித்து பார்த்ததில், ஒருவர் அந்த யுவதியின் காதலன் என்றும் மற்றையவர், ஆண் நண்பர் என்பதும் அம்பலமானதாக  கூறப்படுகின்றது.

இந்நிலையில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் சமந்தாவும், நயன்தாராவும் வேண்டுமென லவ் யூ 2 நடித்திருப்பார். அவருக்கே டப் கொடுத்துள்ளார் இந்த யுவதி.