கழிவுகள் சேகரிப்பு வாரம்: மத்திய சுற்றுசூழல் அதிகாரசபை பிரகடனம்!

கழிவுகள் சேகரிப்பு வாரம்: மத்திய சுற்றுசூழல் அதிகாரசபை பிரகடனம்!

நாடளாவிய ரீதியில் இலத்திரணியல் உபகரண கழிவுகளை சேகரிப்பதற்கான வாரமொன்றை மத்திய சுற்றுசூழல் அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் 10 ஆம் திகதிவரை இலத்திரணியல் உபகரண கழிவுகளை சேகரிப்பதற்கான வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தம்மிடம் உள்ள  இலத்திரணியல் உபகரண கழிவுகளை அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறு சேகரிக்கப்படும் இலத்திரணியல் உபகரண கழிவுகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து, மீள்சுழற்ச்சிக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலத்திரணியல் உபகரண கழிவுகளின் மூலம் ஏற்படும் இரசாயண மற்றும் கதிரியக்க பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.