மீண்டும் பிற்போடப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடர்

மீண்டும் பிற்போடப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடர்

எல்.பி.எல் எனப்படும் லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடர் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த இந்த கிரிக்கட் தொடர் நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது

அரசாங்கத்தின் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய வீரர்களுக்கான தனிமைப்படுத்தலை நிறைவு செய்வதற்கு போதுமான காலம் அவசியமாகின்றமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது இடம்பெறும் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரில் இணைவதற்கு அவசயமான காலத்தை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்து.

இதற்கமைய நாளைய தினம் இடம்பெறவிருந்த லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடருக்கான வீரர்கள் தெரிவை ஒருவார காலத்திற்கு பிற்போடுவதற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளது.