குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அனுமதி!
1979ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure Act) திருத்தத்தைமேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து செல்லும் பொழுது சமீபகாலத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத மற்றும் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதை எதிர்காலத்தில்தடுக்கும் வகையில் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு உட்படுத்துவதற்கு அமைவாக உத்தரவை நீடிப்பதற்கான சந்தேக நபர்கள் அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜராவதற்கான தேவையை நீக்குவதற்கு நீதவானுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக 1979ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் நாடாளுமன்றத்தின் அமர்வு முடிவுக்குகொண்டு வரப்பட்டதினால் அதற்கான அனுமதியை பெற முடியாமல் போனது.
Covid- 19 தொற்று நிலைமையின் கீழ் ஏற்பட்டுள்ள புதியசூழ்நிலையை கவனத்திற்கொண்டு இணையத்தள (Audio Visual Media) காணொளி ஊடக தொடர்பை பயன்படுத்தி கைதிகள் மற்றும் சந்தேக நபர்களுக்குநீதிமன்றத்தில் ஆஜராவதற்கான வசதிகளை செய்வதற்கும்,
ஏனைய வழக்கில் நீதி மன்றத்தின் உத்தரவின் கீழ் தற்பொழுது புனர்வாழ்வளிக்கபட்டுவருவோருக்கும், சந்தேக நபர்களுக்கு இவ்வாறானவசதிகளை செய்து கொடுக்கக்கூடிய வகையில் 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Codeof Criminal Procedure Act) திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கும்,
அதற்கமைவாக யாப்பு திருத்த சட்டமூலத்திற்கான சட்ட திருத்தமூலவரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.